கோவை மாணவி பாலியல் வன்கொடுமை.. மூவருக்கு வாழ்நாள் சிறை!

Covai student sexual assault case: கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

Published on: March 7, 2026 at 5:26 pm

கோவை மார்ச் 7 2026; கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருந்தது; இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என வழக்கை விசாரித்த நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் முழுமையான தண்டனை விவரங்கள் இன்று மாலை 3 மணிக்கு மேல் அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது; இதனால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான சதீஷ் என்ற கருப்பசாமி, கார்த்தி என்ற காளீஸ்வரன், மற்றும் குணா என்ற தவசி ஆகிய மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பேசிய வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூபாய் 7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாணவியின் ஆண் நண்பருக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்தார்.

இதையும் படிங்க; தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ₹5,000.. மு.க ஸ்டாலின் பெருமிதம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com