Thol Thirumavalavan: ஆட்சியில் பங்கு கோர காங்கிரஸூக்கு உரிமை உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர்-தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
Thol Thirumavalavan: ஆட்சியில் பங்கு கோர காங்கிரஸூக்கு உரிமை உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர்-தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

Published on: February 17, 2026 at 6:00 pm
Updated on: February 17, 2026 at 6:03 pm
சென்னை, பிப்.17, 2026: தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு கோர காங்கிரஸூக்கு உரிமை உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர்-தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸுக்கு உரிமை உள்ளது; காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் பங்கு கோரிக்கையை எழுப்பக் கூடாது என்று இல்லை” என்றார்.
பிரச்னை தீரும் என..
தொடர்ந்து, “பிரச்னை சுமுகமாக முடியும்; கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என நம்புகிறேன்” எனவும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. அக்கட்சி தற்போது கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.
ஆனால் இந்தக் கோரிக்கைகளை தி.மு.க நிராகரித்து விட்டது. இதனை வெளிப்படையாகவே தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துவிட்டார். இதனால் அக்கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர வாக்களிப்பீர்.. கி. வீரமணி அறிக்கை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com