Tamilisai Soundararajan: டெல்லியில் இருந்து தாம் அவுட் ஆப் கண்ட்ரோலில் இருப்பதாக மு க ஸ்டாலின் கூறிய நிலையில், அவர் தமிழக மக்களிடமிருந்து அவுட் ஆப் கண்ட்ரோலாக உள்ளார் என விமர்சித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
Tamilisai Soundararajan: டெல்லியில் இருந்து தாம் அவுட் ஆப் கண்ட்ரோலில் இருப்பதாக மு க ஸ்டாலின் கூறிய நிலையில், அவர் தமிழக மக்களிடமிருந்து அவுட் ஆப் கண்ட்ரோலாக உள்ளார் என விமர்சித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
Published on: April 19, 2025 at 1:19 pm
Updated on: April 19, 2025 at 2:25 pm
சென்னை ஏப்ரல் 19 2025: ‘மக்களின் அவுட் ஆஃப் கண்ட்ரோல் ஸ்டாலின்’ என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில், இந்த விமர்சனத்தை முன் வைத்துள்ளார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், ” மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு அடிபணிந்து தானே திமுக இருந்தது” என்றார்.
தொடர்ந்து, “ஊழலுக்கு ஒரு முறை தேச விரோதத்திற்கு ஒருமுறை என திமுக ஆட்சி இரு முறை கலைக்கப்பட்டது” என்றார்.
தமிழக மக்களின் அவுட் ஆப் கண்ட்ரோல்..
இதை எடுத்து மு க ஸ்டாலினை விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன், ” தமிழக மக்களின் அவுட் ஆஃப் கண்ட்ரோலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளார்; அதிமுக பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைந்த பின்பு அவருக்கு பதற்றம் அதிகரித்து உள்ளது” என்றார்.
திருவள்ளூரில் மு.க. ஸ்டாலின் பேச்சு
முன்னதாக , திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின், ” அமித் ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதாக உத்தரவாதம் அளிப்பாரா? என்றார்.
மேலும், டெல்லிக்கு தமிழ்நாடு என்றுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என கூறிய மு.க ஸ்டாலின், “தாம் அழுது புலம்புபவனும் அல்ல; யார் காலிலும் விழுபவனும் அல்ல என கூறினார் என்பது நினைவு கூறப்பட்டது.
இதையும் படிங்க; நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியுமா? அமித் ஷா-க்கு மு.க ஸ்டாலின் கேள்வி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com