M Subramanian: நீட் தேர்வு மாணவர்களுக்கு சுமை தான் என தெரிவித்துள்ளார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
M Subramanian: நீட் தேர்வு மாணவர்களுக்கு சுமை தான் என தெரிவித்துள்ளார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
Published on: June 16, 2025 at 12:03 pm
சென்னை ஜூன் 16 2025; 2025 ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழக மாணவர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். திருநெல்வேலி புஷ்பலதா பள்ளியை சேர்ந்த மாணவர் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்தார்.
மேலும் தமிழக மாணவர்கள் பலரும் இந்த நீட் தேர்வில் அபாரமான தேர்ச்சியை பெற்றுள்ளனர். இந்த நிலையில் நீட் தேர்வு குறித்தும், நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு அளிக்கப்படும் கவுன்சிலிங் குறித்தும் தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசினார்.
அப்போது, ” நீட் தேர்வு மாணவர்களுக்கு சுமை தான்; நீட் தேர்வை பொருத்தவரை மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஆகத்தான் உள்ளது. இந்த நீட் தேர்வு தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இது தற்போது மிகவும் உதவிகரமாக உள்ளன.
2021 நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் இந்த ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.
தொடர்ந்து, ” நீட் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 715 பேரில் 76 ஆயிரத்து 781 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மனம் தளராமல் படிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க; ராமதாஸ், அன்புமணி பிணக்கு.. இதுதான் பாமக தொண்டர்களின் விருப்பம்.. ஜி.கே மணி.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com