Radhapuram canal: ராதாபுரம் கால்வாய்க்கு ஜூன் 16ஆம் தேதி முதல் இருப்பை பொறுத்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Radhapuram canal: ராதாபுரம் கால்வாய்க்கு ஜூன் 16ஆம் தேதி முதல் இருப்பை பொறுத்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Published on: June 14, 2025 at 1:05 pm
திருநெல்வேலி, ஜூன் 14 2025: கோதையாறு பாசனத் திட்டத்தின் கீழ் ராதாபுரம் கால்வாய்க்கு நீர் திறக்க நீர்வளத்துறை அரசுச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து, சென்னை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசன திட்டத்தின் கீழுள்ள இராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு 16.06.2025 முதல் 31.10.2025 வரை 138 நாட்களுக்கு வினாடிக்கு 150 கன அடிக்கு மிகாமல் நீர் திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, “தேவைக்கேற்ப கோதையாறு பாசன திட்ட அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் மற்றும் சிற்றார் அணைகளின் தண்ணீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள (கோதையாறு பாசனத்திட்ட இராதாபுரம் கால்வாய் பாசனப் பகுதிகள்) 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தென்காசி முதியோர் இல்லத்தில் 4 பேர் உயிரிழப்பு.. சரத் குமார் இரங்கல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com