திராவிட மாடல் வளர்ச்சி அரசியல் அல்ல.. கமிஷன் மாடல்.. மாணிக்கம் தாகூர்

Manickam Tagore : “திராவிட மாடல் வளர்ச்சி அரசியல் அல்ல; கமிஷன் அரசியல்“ என காங்கிரஸ் மக்களவை எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Published on: June 6, 2026 at 3:41 pm

சென்னை, ஜூன் 6, 2026: காங்கிரஸ் மக்களவை எம்.பி மாணிக்கம் தாகூர் தனது ட்வீட்டில், 2026 தேர்தலில் திமுக சந்தித்த தோல்வி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர், “131 இடங்களில் இருந்த திமுகவை மக்கள் 59 இடங்களுக்கு குறைத்தது ஏன் என்பதை ஆராயாமல், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் தாக்குவது தோல்வியை மறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது” எனக் குறிப்பிட்டார்.

மேலும், கருணாநிதி காலத்தில் திமுக பல தேர்தல் தோல்விகளை சந்தித்தபோதும், காரணங்களை ஆராய்ந்து மீண்டு வந்தது. ஆனால் இன்றைய திமுக, உதயநிதி தலைமையில், இந்த ஒரு தோல்வியைக் கூட அரசியல் நாகரிகத்துடன் எதிர்கொள்ள முடியாமல், கூட்டணிக் கட்சிகளை குறை கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

மாணிக்கம் தாகூர் ட்வீட்

மேலும் மாணிக்கம் தாகூர், “தமிழக மக்கள் திமுக அரசின் ஊழல், 36% கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம், நிர்வாகத் தோல்வி மற்றும் அகந்தைக்கு எதிராகவே வாக்களித்தார்கள். “திராவிட மாடல்” என்ற பெயரில் நடந்தது வளர்ச்சி அரசியல் அல்ல, “கமிஷன் மாடல்” அரசியல் என்ற உணர்வு மக்களிடையே வலுவாக உருவானது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் அரசியல் தோல்வி மற்றும் நிர்வாக முதிர்ச்சியின்மை திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, ‘ராகுல் காந்தி அதிகாரத்திற்காக அரசியல் செய்பவர் அல்ல; அவர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தையும், அதானி ஆதிக்கத்தையும், ஜனநாயக அமைப்புகளின் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்து எதிர்த்து நிற்கும் தேசிய தலைவர்.
ஆகவே, மக்களின் தீர்ப்பை மதித்து சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக, மற்றவர்களை குறை கூறிக் கொண்டே இருந்தால் திமுகவின் வீழ்ச்சி மேலும் வேகமாகும்” எனவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும்… மு.க ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com