Chennai: இலங்கை மறுவாழ்வு முகாம் தலைவரை கொலை செய்த சம்பவத்தில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Chennai: இலங்கை மறுவாழ்வு முகாம் தலைவரை கொலை செய்த சம்பவத்தில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: March 9, 2026 at 8:30 pm
சென்னை, மார்ச் 9, 2026: இலங்கை மறுவாழ்வு முகாம் தலைவர் கண்ணா என்ற சிவகுமார் (42) கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இலங்கை மறுவாழ்வு முகாம் தலைவர் கண்ணா என்ற சிவகுமார் (42) தாக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், போலீசார் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமின் ‘கேம்ப் லீடர்’ கண்ணா என்ற சிவகுமார் (42) சனிக்கிழமை (மார்ச் 7) இரவு கொலை செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், உறவினர்கள் மற்றும் முகாமில் வசிக்கும் பிறர், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரி போராட்டம் நடத்தினர்.
இது குறித்து சிப்காட் போலீசாரின் தகவலின்படி, கைது செய்யப்பட்டவர்கள் செல்வா அலைஸ் ஸ்வெந்திரன், மகேந்திரன் அலைஸ் கண்ணன், தீபக், ஆகாஷ் பிரசன்னா, புஷ்பா ஜோதி மற்றும் அக்ஷயா என அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணா என்ற சிவகுமார் (42), 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கும் பேத்திக்குப்பம் முகாமின் நிர்வாகக் குழுத் தலைவராக இருந்தார். இவர், சனிக்கிழமை இரவு முகாமுக்குள் நடந்து சென்றபோது, முன்பே பகை இருந்த குழுவினர் அவரை தடுத்து, இரும்புக் கம்பியால் தலையும் முகத்தையும் குறிவைத்து தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை; 4 பெண்கள் மீது தாக்குதல்.. இளைஞர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com