Sri Lankan pirates attack Tamil Nadu fishermen: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sri Lankan pirates attack Tamil Nadu fishermen: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on: April 17, 2025 at 1:02 pm
ராமேஸ்வரம் ஏப்ரல் 17 2025: நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இந்த கொள்ளையர்கள் தமிழக வீரர்களை தாக்கி அவர்களிடமிருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், ஜிபிஎஸ் கருவிகள், இரண்டு செல்போன்கள் மற்றும் பேட்டரிகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இது மட்டுமின்றி 30 கிலோ மீன்களையும் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம் செருதூர் மீனவர்களை தொடர்ந்து வேதாரண்யம் மீனவர்கள் மீதும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக வெளியான செய்திகள் மீனவ மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க வருவதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். 2025 ஜனவரி மாதத்திற்கு பிறகு இந்த கைது நடவடிக்கை அதிகரித்து காணப்படுகிறது; மேலும் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் பேசி உடனடியாக தீர்வு காண வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘விஜயை இஸ்லாமியர்கள் அழைக்க வேண்டாம்’: சகாபுதீன் ராஷ்வி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com