சென்னை டு கன்னியாகுமரி ரம்ஜான் சிறப்பு ரயில்.. தென்னக ரயில்வே!

Ramadan Special Train: சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Published on: March 20, 2026 at 11:29 am

சென்னை மார்ச் 20, 2026; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் புனித ரம்ஜான் பண்டிகை, மார்ச் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என இஸ்லாமிய தலைமை காஜி-யால், மார்ச் 19ஆம் தேதி வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது.

இதேபோல் புதுச்சேரியிலும் மார்ச் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தென்னக ரயில்வே சார்பில் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; இதன் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.

புனித ரமலான் சிறப்பு ரயில்

புனித ரமலானை முன்னிட்டு சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயிலின் விவரங்கள் இதோ.!

ரயில் எண் 06045

புறப்படும் நேரம்: மார்ச் 20 (வெள்ளி) இரவு 23.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.

சென்றடையும் நேரம்: மறுநாள் சனிக்கிழமை மதியம் 13.00 மணியளவில் கன்னியாகுமரியைச் சென்றடையும்.

ரயில் எண் 06046

புறப்படும் நேரம்: மார்ச் 22, 2026 (ஞாயிறு) இரவு 23.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.

சென்றடையும் நேரம்: மறுநாள் திங்கட்கிழமை காலை 11.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்

இதையும் படிங்க; அதிமுக கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்கும் பாஜக? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com