தி.மு.க.வில் விருப்ப மனு இல்லை.. மாஜி அமைச்சர் பொன்முடி போட்டியிட மறுப்பு?

Assembly Election 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிட மாட்டர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அவர் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கவில்லை.

Published on: March 23, 2026 at 2:03 pm

Updated on: March 23, 2026 at 2:07 pm

சென்னை, மார்ச் 23, 2026: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்று, இதில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில், அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கிடையில், 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிடப் போவதில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன. அதாவது, தி.மு.க. சார்பில் போட்டியிட இதுவரை பொன்முடி விருப்ப மனு அளிக்கவில்லை.

விருப்ப மனு அளிக்கவில்லை

இதனால், வரும் தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிடப்போவதில்லை என்ற தகவல் காட்டுத் தீப் போல் பரவி வருகிறது. இதற்கிடையில், பொன்முடியின் மகனான கௌதம சிகாமணி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இதனால் அவர் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

சர்ச்சைப் பேச்சு

முன்னாள் அமைச்சர் பொன்முடி பல்வேறு சர்ச்சை பேச்சுகளில் சிக்கியவர் ஆவார். மகளிர் விடியல் பேருந்து பயணத்தை ஓசி பஸ் என்றார். மேலும், சைவம் மற்றும் வைணவம் குறித்தும் இழிவுப்படுத்தி ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: பட்டியலின விவசாயி படுகொலை.. குற்றவாளி ஏன் கைதாகவில்லை? எடப்பாடி பழனிசாமி கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com