Sellur K Raju: நடிகர் வடிவேல், நடிகை நயன்தாரா வந்தால் கூட கூட்டம் கூடும் என அதிரடியாக பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
Sellur K Raju: நடிகர் வடிவேல், நடிகை நயன்தாரா வந்தால் கூட கூட்டம் கூடும் என அதிரடியாக பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

Published on: December 29, 2025 at 7:09 pm
சென்னை, டிச.29, 2025: அ.தி.மு.க மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நடிகர் வடிவேல், நடிகை நயன்தாரா வந்தால் கூட கூட்டம்” என அதிரடியாக பேசி நடிகர் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
செல்லூர் ராஜூ பேட்டி
அ.தி.மு.க. மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் நடிகர் விஜயின் விமர்சனம் தொடர்பாக கேள்வியெழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்த அவர், “நேற்று அரசியலுக்கு வந்த விஜய்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; நடிகர் வடிவேல், நடிகை நயன்தாரா வந்தால் கூட கூட்டம் கூடும்” என அதிர்ச்சி அளித்தார்.
நான்கு முனை போட்டி
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக காங்கிரஸ் ஓரணியும், அதிமுக பாஜக எதிரணியிலும் உள்ளன.
மேலும், வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என்றும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது தலைமையில் மட்டுமே கூட்டணி எனவும் அறிவித்துள்ளன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : என் மார்பினில் ஈட்டியால் குத்துகிறார் அன்புமணி.. ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com