Seeman questions regarding Rs 1000 crore scam: டாஸ்மாக்கில் ரூபாய் ஆயிரம் கோடி தான் முறைகேடா என கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Seeman questions regarding Rs 1000 crore scam: டாஸ்மாக்கில் ரூபாய் ஆயிரம் கோடி தான் முறைகேடா என கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Published on: March 15, 2025 at 10:13 pm
சென்னை மார்ச் 15, 2025: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டாஸ்மாக்கில் ரூபாய் ஆயிரம் கோடி தான் முறைகேடு நடைபெற்றதா என கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து சீமான், ” டாஸ்மாக்கில் ரூபாய் ஆயிரம் கோடி முறைகேடுகள் நடைபெற்றதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. டாஸ்மாக்கை பொருத்தமட்டில் வாகன உரிமம் வழங்குதல், பார் உரிமம் வழங்குதல், ஊழியர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் என பல்வேறு விஷயங்களிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
தெலுங்கானா மற்றும் டெல்லியில் நடைபெற்ற மதுபான ஊழல்களில் அமலாக்கத்துறை எவ்வளவு தீவிரம் காட்டியது? டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கூட கைது செய்யப்பட்டனர். ஆனால் இது போன்ற எந்த ஒரு தீவிரத்தையும் அமலாக்கத்துறை காட்டவில்லை. இந்த விஷயத்தில் விசாரணை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனையில் 1000 கோடிகள் ஊழலென அமலாக்கத்துறை குறைத்துக் கூறுவது யாரைக்காப்பாற்ற? பல்லாயிரம் கோடிகள் ஊழல் குறித்து விசாரணை விரிவடைய வேண்டும்!@CMOTamilnadu @mkstalin
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) March 15, 2025
தமிழ்நாடு அரசு நடத்தும் மலிவு விலை மதுபானக்கடை மது விற்பனையில் 1000 கோடி ரூபாய் ஊழல்… pic.twitter.com/puBNoVaxpP
மதுபான ஊழலில் யார் ஈடுபட்டிருந்தாலும், அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் உயர் பிரமுகர்கள் என அனைவரும் விசாரணை வலையத்திற்குள் வரவேண்டும். அமலாக்கத்துறை இந்த விசாரணையை மேலும் விரிவாக்கம் செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசை எதிர்க்காத திமுக தற்போது எதிர்ப்பது போல் நடிப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ள சீமான், இதெல்லாம் டாஸ்மாக் ஊழலை மறைக்க திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம் எனவும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க தென் மாவட்டங்களில் சாதிய கொடுமைகள் அதிகரிப்பு.. தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com