சென்னையில் சரத்குமார் திடீர் ஆலோசனை.. பாஜகவில் இருந்து விலகல்?

Sarathkumar: சென்னையில் நடிகர் சரத்குமார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்; அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published on: March 22, 2026 at 1:11 pm

Updated on: March 22, 2026 at 1:17 pm

சென்னை மார்ச் 22, 2026; நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான சரத்குமார் சென்னையில் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் சரத்குமாரின் ஆதரவாளர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் என பலர் உடன் இருக்கிறார்கள். நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்ற இயக்கத்தின் நிறுவனர் ஆவார்; இவர் 2024 ஆம் ஆண்டு இந்த கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்து, தனது ஆதரவாளர்களுடன் தானும் கட்சியில் இணைந்து கொண்டார்.

இந்த நிலையில் சரத்குமாருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் என்ற பொறுப்பு பாஜக சார்பில் வழங்கப்பட்டது; எனினும் அவருக்கு கூடுதலாக எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை. குறிப்பாக சரத்குமாருக்கு தமிழ்நாட்டில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை; இது அவர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரத்குமார் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்; இதனால் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகக்கூடும் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் பரவியுள்ளன. 2023 சட்டமன்ற பொது தேர்தலில் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணிக்கை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; திமுக கூட்டணியில் இருந்து விலகல்.. வேல்முருகன் அறிவிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com