Rahul Gandhi Chennai Visit: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Rahul Gandhi Chennai Visit: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Published on: February 11, 2025 at 4:33 pm
ராகுல் காந்தி சென்னை பயணம்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி திடீர் பயணமாக இன்று மாலை சென்னை வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆந்திராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு பின்னர் சென்னை வருகிறார் என்று கூறப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் ராகுல் காந்தி வருகிறார் என்றும் இன்று இரவு அவர் இங்குதான் தாங்குவார் என்றும் கூறப்படுகிறது. எனினும் அவரது பயணத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதுகுறித்து வெளியான தகவலில் ராகுல் காந்தி இன்று இரவு சென்னையில் தங்குவார் என்றும் அதன் பின்னர் அவர் விமானம் மூலமாக டெல்லிக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
மு.க ஸ்டாலின் உடன் சந்திப்பா?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்த பயணம் திட்டமிடப்படாத பயணம் என கூறப்படுகிறது. அதாவது ஆந்திராவில் இருந்து அவர் திடீர் பயணமாக சென்னை வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகையால் அவர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்திப்பாரா? அரசியல் தொடர்பான வேறு ஏதும் சந்திப்புகள் நடக்குமா என்பன குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
டெல்லி தேர்தல் முடிவுகள்
தேசிய தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி எட்டாம் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
10 ஆண்டு காலம் ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மிக்கு 22 இடங்கள் கிடைத்தன. எனினும் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை; அக்கட்சியின் வேட்பாளர்களில் மூன்று பேர் மட்டுமே டெபாசிட் பெற்றனர். மீதமுள்ள 67 வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க மணிப்பூர் சட்டசபையை கூட்ட ஏன் தாமதம்? கவர்னருக்கு காங்கிரஸ் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com