Ramadoss Anbumani clash: ‘பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும், மருத்துவர் அன்புமணி ராமதாசும் இணைந்து பேச வேண்டும்; பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களின் விருப்பம் இதுதான்’ என அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
Ramadoss Anbumani clash: ‘பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும், மருத்துவர் அன்புமணி ராமதாசும் இணைந்து பேச வேண்டும்; பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களின் விருப்பம் இதுதான்’ என அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
Published on: June 16, 2025 at 11:47 am
Updated on: June 16, 2025 at 11:48 am
சென்னை ஜூன் 16 2025; பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாசும், அன்புமணி ராமதாஸும் இணைந்து பேச வேண்டும்; பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களின் விருப்பம் இதுதான் என மனம் திறந்து பேசி உள்ளார் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி.
தொடர்ந்து இதுகுறித்து பேசிய ஜிகே மணி, ” இரு தலைவர்களும் ( ராமதாஸ்- அன்புமணி) அரசியல் குறித்து தெரியாதவர்கள் அல்ல. அவர்கள் இருவரும் இணைந்து பேச வேண்டும். மருத்துவர் ராமதாசும் மருத்துவர் அன்புமணி ராமதாஸும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்களின் விருப்பம் ஆகும்.
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தமட்டில், சுமுகமான தீர்வு ஏற்பட வேண்டும் என்றால் அது இருவரின் கைகளில் தான் உள்ளது. ஆகவே, தற்போது கட்சியில் உள்ள பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசி சுமுகமான தீர்வை காண வேண்டும்” என்றார்.
மருத்துவர் ராமதாஸ், அன்புமணி பிரச்சனை என்ன?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவரான ராமதாஸ், கட்சிக்கு தலைவராக தனது மகன் அன்புமணியை நியமித்தார். இந்த நிலையில், சில ஆண்டுகளில் கட்சிக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டன.
தொடர்ந்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீது நிறுவன தலைவர் ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தனது தாயை அடிக்க பாய்ந்தார் என்றும் கூட்டணி தொடர்பாக தவறான முடிவுகளை எடுத்தார் என்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க தமக்கு விருப்பம் இல்லை எனவும் மகன் அன்புமணி மற்றும் மருமகள் சௌமியா ஆகியோரின் வற்புறுத்தல் காரணமாக தாம் சம்மதித்ததாகவும் கூறினார்.
முன்னதாக கட்சியின் பொதுக்குழு கூட்டத்திலும் பிரச்சினை வெடித்தது. அன்புமணி ராமதாஸ் தனியாக அலுவலகம் ஒன்றை திறந்து இருப்பதாக கூறினார். அப்போது தந்தை ராமதாஸும் மகன் அன்புமணியும் ஒரே மேடையில் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை உள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த உள்கட்சி பிரச்சனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com