சென்னை, ஏப்.10, 2026: சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் திரும்பப்பெறும் கடைசி நாள் வியாழக்கிழமை முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 419 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 38 பேரும், கொளத்தூரில் 35 பேரும் போட்டியிடுகின்றனர்.
மீதமுள்ள தொகுதிகளில், வில்லிவாக்கம் மற்றும் ராயப்புரம் தலா 28 வேட்பாளர்களைக் கொண்டுள்ளன. தொடர்ந்து, வேளச்சேரியில் 27 பேரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் தி.நகர் தொகுதிகளில் தலா 26 பேர் போட்டியிடுகின்றனர்.
அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் தலா 24 பேர் களத்தில் உள்ளனர். திரு.வி.க நகர் மற்றும் ஹார்பர் தொகுதிகளில் தலா 23 வேட்பாளர்கள் உள்ளனர்.
இதனால், சென்னை மாவட்டத்தில் தேர்தல் போட்டி மிகுந்த பரபரப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: விஜய் சொன்னதில் என்ன தவறு? ஜி.கே. வாசன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்