P.R. Pandian: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு தனது 101ஆவது வயதில் காலமானார். அவருக்கு பி.ஆர். பாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
P.R. Pandian: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு தனது 101ஆவது வயதில் காலமானார். அவருக்கு பி.ஆர். பாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Published on: February 25, 2026 at 4:53 pm
சென்னை, பிப்.25, 2026: இந்திய கம்யூனிஸ்ட் முதுபெரும் தலைவர் நல்லக்கணணு மறைவுக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் போர்படை தளபதியும், விவசாயிகளின் உரிமைகளுக்கான போர்க்களத்தில் சமரசம் அற்ற போராளியுமான மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் தோழர் ஆர் நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். எனது தந்தையாரோடு (பி. இராமலிங்கம்) சகோதர பாசத்தோடு நெருங்கிய உறவு கொண்டவர்.குடும்பப் பாச உணர்வோடு பழகியவர். இவரது இழப்பு எங்கள் குடும்பத்திற்கும் பேரிழப்பாகும்.
நெல்லை சதி வழக்கில் கொடுங்கோல் தண்டனையை அனுபவித்தவர். நீதி,நேர்மை ஒழுக்கம்,கட்டுப்பாடு, தூய்மை, எளிமை ஆகியவற்றை தனது வாழ்நாள் முழுவதும் கொள்கையாக கடைப்பிடித்தவர்.அரசியலில் இவர் எடுத்துக்காட்டாக விளங்கியவர்.இவரை பின்பற்றி அனைவரும் தங்களை அரசியலில் தலைவர்களாக வளர்த்துக் கொள்ளுகிற ஆளுமை மிக்க போர் குணமிக்க தலைவராக வழிகாட்டியாக விளங்கியவர்.
இவரது மறைவு தமிழகத்தில் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவு தமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சம் வந்து விட்டதோ?என அஞ்சத் தோன்றுகிறது, எனவே இவரது அரசியல் வாழ்க்கை நாம் அனைவரும் பின்பற்றக்கூடி உயரிய வாழ்க்கை. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டுமென சபதம் ஏற்போம்.ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் வீரவணக்கத்தையும் கண்ணீர் அஞ்சலியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Tamil News Updates Feb 25 2026: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com