மீண்டும் திமுக ஆட்சி தான்.. மு க ஸ்டாலினை சந்தித்தபின் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

O Panneerselvam: தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Published on: February 20, 2026 at 4:06 pm

சென்னை பிப்ரவரி 20,2026; தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வரும் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் தெரிவித்தார். முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தனது மகன் ரவீந்திரநாத் உடன் சந்தித்த ஓ பன்னீர்செல்வம், அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்புக்கு பின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என நீங்கள் கூறினீர்களே என கேட்டதற்கு தமிழ்நாட்டிற்கு வழி பிறந்துள்ளது என பதில் அளித்தார்.
மேலும் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரும் என்ற கருத்தையும் அவர் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்த பின் ஓ பன்னீர்செல்வம் சபாநாயகர் அப்பாவு-வையும் சந்தித்து பேசினார். இந்த நிலையில் தனது பேட்டியின் போது ஓ பன்னீர்செல்வம் ஐந்து ஆண்டுகளாக நல்லாட்சி கொடுத்ததாக மு.க ஸ்டாலின் அரசை பாராட்டினார்.

ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சராக்கப்பட்டவர்; இவர் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு க ஸ்டாலினை புகழ்ந்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று, தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுக கூட்டணியில் இணைந்த நிலையில் இன்று ஓ பன்னீர் செல்வத்தின் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் பில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; தே.மு.தி.க கூட்டணிக்கு வந்தது கூடுதல் பலம்.. உதயநிதி ஸ்டாலின்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com