Pennikuvik Memorial Day: பென்னிகுவிக் நினைவு தினத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மரியாதை செலுத்தியுள்ளார்.
Pennikuvik Memorial Day: பென்னிகுவிக் நினைவு தினத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மரியாதை செலுத்தியுள்ளார்.

Published on: March 9, 2026 at 11:59 am
சென்னை, மார்ச் 9, 2026: “வறண்டு கிடந்த தென்மாவட்டங்கள் வளம்பெற, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுவிக்” என அவரது நினைவுதினத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (திங்கள்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதரபுரம் ஆகிய தென்மாவட்ட மக்களின் பாசனத் தேவையையும், குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் தன் சொந்த செலவில் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய வள்ளல், மனிதநேயமிக்க பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் நினைவுதினம் இன்று.
வறண்டு கிடந்த தென்மாவட்டங்கள் வளம்பெற, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுவிக் அவர்களின் இந்த நினைவு தினத்தில், மக்களின் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய அன்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் நினைவில் கொண்டு போற்றுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டி20 உலக கோப்பை 2026.. மூன்று சாதனை படைத்த இந்தியா.. பட்டியலிட்ட அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com