O Panneerselvam: உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
O Panneerselvam: உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Published on: January 3, 2026 at 1:30 pm
சென்னை ஜனவரி 3, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது; இந்த தேர்தலில் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெரும் வகையில் அதிமுக வியூகங்கள் அமைத்து வருகிறது. திமுகவை பொருத்தமட்டில் தற்போது கூட்டணியில் உள்ள எந்த கட்சிகளும் வெளியேறிவிடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த கூட்டணியை பொறுத்தவரை காங்கிரசும் விடுதலைச் சிறுத்தைகளும் மிகப்பெரிய பலமாக உள்ளன என சில அரசியல் நோக்கங்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் வலையொலி ஒன்றுக்கு பேட்டி அளித்த காங்கிரஸின் அமெரிக்க நாராயணன், “₹1 லட்சம் வேண்டுமானாலும் நான் சவால் விடுகிறேன்; காங்கிரசின் ஆதரவு இல்லாமல் எந்த கூட்டணியாலும் வெற்றி பெற இயலாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு காங்கிரஸ் கூட்டணி மிக மிக அவசியம்” என்றார்.
ஓபிஎஸ் அமித்ஷாவுடன் பேச்சு
இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சர் ஆன ஓ பன்னீர்செல்வம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம்,” தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினேன்” என்றார்.
இதையும் படிங்க; 621 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை.. மு.க ஸ்டாலின் வழங்கினார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com