O. Panneerselvam meets stalin: தி.மு.க. கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் இணையலாம் என்ற பேச்சுகள் மீண்டும் வெளியாக தொடங்கியுள்ளன.
O. Panneerselvam meets stalin: தி.மு.க. கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் இணையலாம் என்ற பேச்சுகள் மீண்டும் வெளியாக தொடங்கியுள்ளன.

Published on: February 20, 2026 at 3:44 pm
சென்னை, பிப்.20, 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை எதிர்கொள்ளும் பொருட்டு மு.க. ஸ்டாலின் கூட்டணியை விரிவுப்படுத்தி வருகிறார். தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கும் நிலையில், அக்கட்சி வெளியேறினால் தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வியாழக்கிழமை (பிப்.19, 2026) யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தது.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வமும் இணையலாம் என கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதற்கிடையில், தமிழக சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது அவருடன் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் தாகூரும் உடனிருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். இதனால் தி.மு.க. கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம் இணையக் கூடும் என்ற யூகங்கள் மீண்டும் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க, மு.க ஸ்டாலின் ராஜ தந்திரம்.. தொல். திருமாவளவன் புகழாரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com