Nainar nagendran : பாரதிய ஜனதாவில் இருந்து அமைச்சர்கள் வருவார்கள் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
Nainar nagendran : பாரதிய ஜனதாவில் இருந்து அமைச்சர்கள் வருவார்கள் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Published on: February 26, 2026 at 7:27 pm
சென்னை, பிப்.26, 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி பயணிக்கிறது. இந்தக் கூட்டணி இழந்த ஆட்சியை மீட்க உறுதிபூண்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பணிமனை திறப்பு விழாவில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ““இங்கிருந்து 20, 30 சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்று நினைக்கிறேன்; இங்கிருந்து அமைச்சர்களாககூட வருவார்கள்; இறைவன் நினைத்தல் நிச்சயமாக நடக்கும்” என்றார்.
இது அக்கட்சி தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. கிட்டத்தட்ட 32 தொகுதிகள் வரை கேட்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 39 தொகுதிகள், 2 மாநிலங்களவை சீட்.. காங்கிரஸ் தி.மு.க பேச்சு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com