பரபரக்கும் தமிழக அரசியல் களம்.. அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

Kaliyammal Joins AIADMK: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் தற்போது அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Published on: March 13, 2026 at 1:21 pm

சென்னை, மார்ச் 13 2026: தமிழக அரசியலில் சமூக செயற்பாட்டாளரும் அரசியல் ஆர்வலருமான காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) கட்சியில் இணைந்தார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பின்னர் காளியம்மாள் தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார். இந்நிலையில், அவர் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் காளியம்மாள் அதிமுகவில் உறுப்பினராக இணைந்தார்.

அதிமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள், மக்கள் நலன் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றை முன்னிறுத்தி அரசியல் பணியில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்தார். ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்தேன். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்துவந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று நான் இன்று அதிமுகவில் இணைந்துள்ளேன். எனக்கு பொறுப்புகள் வழங்குவது குறித்து கட்சியின் தலைமைமை முடிவு செய்யும் என்றார்.

அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : திமுக ஆட்சியில் கொலைகள் குறைவா?..தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!.. அன்புமணி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் கொலைகள் குறைவா?..தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!.. அன்புமணி குற்றச்சாட்டு Anbumani Ramadoss

திமுக ஆட்சியில் கொலைகள் குறைவா?..தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!.. அன்புமணி குற்றச்சாட்டு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com