Sekarbabu: தமிழ்நாட்டின் அரசியல் தீர்க்கதரிசி மு க ஸ்டாலின் என புகழாரம் சூட்டியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
Sekarbabu: தமிழ்நாட்டின் அரசியல் தீர்க்கதரிசி மு க ஸ்டாலின் என புகழாரம் சூட்டியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
Published on: March 16, 2025 at 2:58 pm
Updated on: March 16, 2025 at 3:39 pm
சென்னை மார்ச் 16 2025; தமிழ்நாட்டின், வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கை 2025 மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த வரவு செலவு திட்ட அறிக்கையை விமர்சித்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கு அண்ணாமலையை அரசியல் விலாசம் அற்றவர் என விளாசினார் அமைச்சர் சேகர்பாபு.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ” தினந்தோறும் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஒரு தலைவர், மாநில கட்சிக்கு இருப்பாரே என்றால் அது அண்ணாமலை தான். காமாலை நோய் பிடித்தவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல் எதை எடுத்தாலும் அண்ணாமலை குறை சொல்கிறார்.
இதையும் படிங்க: Tamil Nadu Budget 2025: இரு மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை.. தங்கம் தென்னரசு உறுதி
இவ்வாறு பழக்கப்பட்ட அண்ணாமலை இதில் நிறைவாக ஏதேனும் கூறுவார் என நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எங்களை வசைபாடியவர்களும் இன்றைக்கு வாழ்த்து சொல்கின்றனர். அந்த அளவுக்கு நிதிநிலை அறிக்கையை உலக அரங்கில் தூக்கிப் பிடித்த மதிநுட்பம் மிக்க அரசியல் தீர்க்கதரிசி மு க ஸ்டாலின்.
இன்று மாநிலம் கடந்து, ஒன்றியம் கடந்து, உலக நாடுகள் பாராட்டுகிற அளவுக்கு இது இருக்கிறது. இந்த நிலையில் விலாசம் அற்ற மக்களுடைய சக்தி பெறாத; மக்களுடைய ஆதரவு பெறாத அண்ணாமலைக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. வேளாண் பட்ஜெட்டை உண்மையான விவசாய பெருங்குடி மக்கள் வரவேற்றுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க டாஸ்மாகில் ரூ.1000 கோடி தான் முறைகேடா? சீமான் பரபரப்பு கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com