MK Stalin: நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க முடியுமா என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
MK Stalin: நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க முடியுமா என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
Published on: April 18, 2025 at 1:21 pm
Updated on: April 18, 2025 at 1:22 pm
திருவள்ளூர் ஏப்ரல் 18 2025: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க முடியுமா என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில், நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், ” டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது” என்றார். தொடர்ந்து பேசிய மு க ஸ்டாலின், ‘ மற்ற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ரெய்டு மூலம் மிரட்டி ஆட்சி அமைக்க உங்களுடன் பார்முலா தமிழ்நாட்டில் வேலை செய்யாது” என்றார்.
#Live: திருவள்ளூர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்புரைhttps://t.co/DKoKlAL2X5
— M.K.Stalin (@mkstalin) April 18, 2025
தொடர்ந்து, “தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்; 2026 இல் திராவிட மாடல் ஆட்சி தான்” என்றார்.
நீட் தேர்வு விவகாரம்
மாநில உரிமைகளின் அகில இந்திய முகமாக திமுக திகழ்கிறது என்று கூறிய மு க ஸ்டாலின், “நீட் தேர்வு, மும்மொழி கொள்கை, வக்பு போர்டு திருத்த சட்டம் என திமுக தான் இந்திய அளவில் ஓங்கி குரல் கொடுத்து வருகிறது” என்றார். தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க முடியுமா? இந்த உத்தரவாதத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுப்பாரா? என்றார்.
Tiruvallur | Tamil Nadu CM MK Stalin says, "I want to ask Union Home Minister Amit Shah, can he give assurance to provide exemption from NEET? Can he give assurance that you won't impose Hindi? Can he list out the release of special funds to Tamil Nadu? Can you give your word… pic.twitter.com/FX4VoJmslk
— ANI (@ANI) April 18, 2025
‘நான் அழுது புலம்புபவன் அல்ல’
மேலும், முக ஸ்டாலின், ” நாங்கள் நிதி கேட்பது அழுகை அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் உரிமை” என்றார். தொடர்ந்து தாம் அழுது புலம்புபவன் அல்ல; யார் காலிலும் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல” என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரர்.. பயோபிக் படத்தை இயக்கும் பா. ரஞ்சித்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com