Tiruppur: திருப்பூர் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த கணவன்-மனைவிக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Tiruppur: திருப்பூர் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த கணவன்-மனைவிக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Published on: May 4, 2025 at 1:27 pm
Updated on: May 4, 2025 at 1:29 pm
சென்னை, மே 42025: செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம்-காங்கேயம் சாலை, குள்ளாய்ப்பாளையம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சூரியநல்லூர் கிராமம், சேர்வக்காரம்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் (வயது 44) த/பெ.குழுந்தான் என்பவர் தனது மனைவி ஆனந்தி (வயது 38) மற்றும் மகள் தீட்சையா (வயது 12) ஆகியோருடன் நேற்று (3.5.2025) இரவு தனது இருசக்கர வாகனத்தை ஸ்டாண்டிலிருந்து எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றார்.
அப்போது செல்லும் வழியில் தாராபுரம் காங்கேயம் சாலை, குள்ளாய்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் நாகராஜ் மற்றும் ஆனந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மு.க. ஸ்டாலின் இரங்கல்- நிவாரணம்
இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “இவ்விபத்தில் பலத்த காயமடைந்து கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீட்சையா என்பவருக்கு சிற்ப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீக்ஷிதாவிற்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவைகள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : வக்ஃப் திருத்தச் சட்டம்; மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க பதில் மனு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com