Minister Shekhar Babu: திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Minister Shekhar Babu: திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Published on: June 19, 2025 at 7:45 pm
சென்னை, ஜூன் 19 2025: திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும். தமிழில் குட முழக்கு நடத்தப்பட வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்த ஒன்றுதான்” என்றார்.
பழனி, மருதமலை..
தொடர்ந்து, பழனி மற்றும் மருதமலை பற்றிய அமைச்சர் சேகர் பாபு, “ஏற்கனவே பழனி மற்றும் மருதமலையில் தமிழில் குட முழுக்கு நடத்தப்பட்டது” என்றார்.
மேலும், மு.க. ஸ்டாலின் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதில் உறுதியாக உள்ளார் என்றார்.
இது பற்றி பேசிய அமைச்சர் சேகர் பாபு, “எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதுதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொள்கை. ஆக யாரும் சொல்லித்தான் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பது அல்ல” என்றார்.
நாம் தமிழர் கோரிக்கை..
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழக்கு நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்து இருந்தது. இந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சேகர் பாபு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டியது தி.மு.க.. சொல்கிறார் மு.க. ஸ்டாலின்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com