Minister MRK Panneerselvam: கட்சியிலும் அரசியலிலும் இடம் இல்லாமல் அன்புமணி திண்டாடிக் கொண்டிருக்கிறார் எனக் கூறிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தந்தையுடன் மல்லுக் கட்டும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் என்றார்.
Minister MRK Panneerselvam: கட்சியிலும் அரசியலிலும் இடம் இல்லாமல் அன்புமணி திண்டாடிக் கொண்டிருக்கிறார் எனக் கூறிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தந்தையுடன் மல்லுக் கட்டும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் என்றார்.
Published on: August 17, 2025 at 6:06 pm
சென்னை, ஆக.17 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், விரக்தியின் உச்சத்தில் பேசுகிறார் என பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம். இது குறித்து பேசிய எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், “சொந்தக் கட்சியில் பதற்றம் தீரும்வரை இப்படி அறிக்கைகள் வெளியிடுவதை அன்புமணி ராமதாஸ் நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “கட்சியிலும் அரசியலிலும் இடம் இல்லாமல் அன்புமணி ராமதாஸ் திண்டாடிக் கொண்டாடிருக்கிறார்” என்றார். மேலும், தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம்” என்றும் தெரிவித்தார்.
அன்புமணி என்ன கூறினார்?
“தருமபுரி மாவட்டம் மீதான வன்மத்தைக் கைவிடுங்கள்” என்ற தலைப்பில் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “ காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துங்கள்” எனவும் கூறியிருந்தார்.
மேலும் அதில், “தருமபுரி மாவட்ட மக்களும் தமிழ்நாட்டின் குடிமக்கள் தான். அவர்கள் செலுத்தும் வரியில் தான் அரசு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரும், அமைச்சர்களும் அனுபவிக்கும் பல்வேறு வசதிகளுக்கு செலவு செய்யப்படும் நிதியில் அவர்களின் வரிப்பணமும் உள்ளது. இவற்றையெல்லாம் அனுபவித்துக் கொண்டு அவர்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களை பழிவாங்குவதும், அவர்கள் மீது வன்மத்தைக் காட்டுவதும் நியாயமல்ல.
அவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைவிட்டு தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்குத் தேவையான தருமபுரி& காவிரி உபரிநீர் திட்டம், சிப்காட் தொழில்வளாகம் ஆகியவற்றை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு , தருமபுரி & மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அறிவிப்புகளை நாளைய விழாவில் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துங்கள்.. தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com