Assembly election 2026: திமுக தலைவரும் முதலமைச்சர் ஆன மு.க ஸ்டாலினிடம் பேசி சுமூகமுறையில் தீர்வு காண முயற்சிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Assembly election 2026: திமுக தலைவரும் முதலமைச்சர் ஆன மு.க ஸ்டாலினிடம் பேசி சுமூகமுறையில் தீர்வு காண முயற்சிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Published on: March 22, 2026 at 1:56 pm
சென்னை மார்ச் 22, 2026; திமுக கூட்டணியில் சமூக தீர்வு காண விரும்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் என்ன பிரச்சனை?
2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் தவிர தேசிய முற்போக்கு திராவிட கழகம் யாரும் எதிர்பாராத வண்ணம் திமுக கூட்டணியில் இணைந்தது. இதனால் அந்த கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட்டு வழங்கப்பட்டது.மேலும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு, கடந்த முறையில் காட்டிலும் கூடுதலாக மூன்று தொகுதிகள் வழங்கப்பட்டன.
மேலும் ஒரு மாநிலங்களவை எம்பி சீட்டும், உள்ளாட்சித் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் கூட்டணியில் அப்படியே தொடர்ந்த இடதுசாரிகள் மற்றும் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக, 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் வழங்கப்பட்டன; தற்போது அவர்களுக்கு ஒரு தொகுதி குறைக்கப்பட்டு 2026 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் ஐந்து தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதே அளவிலான தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வழங்க திமுக தலைமை முன் வருவதாக தகவல்கள் வெளியாகின; இதனை ஏற்க மார்க்சிஸ்ட் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அப்படியே இதனை ஏற்றாலும் ஒரு தொகுதி சென்னையில் வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான பிரச்சனைகள் காரணமாக திமுக கூட்டணியில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன; இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல்
2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது; முடிவுகள் மே மாதம் நான்காம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க; தமிழகத்தில் தனித்து நின்று பாஜகவால் ஒரு தொகுதியாவது வெற்றி பெற முடியுமா? ஓ.பி.எஸ் சவால்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com