சென்னை, பிப்.20, 2026: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மணிசங்கர் ஐயர், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது இன்றைய அரசியல் நிலவரம் குறத்து பல்வேறு தகவல்களை அவர் அந்நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டார். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், “யாரும் காங்கிரஸ் கட்சி பெயரில் ஓட்டு போடப் போவதில்லை” என்றார்.
தொடர்ந்துப் பேசிய அவர், “நமக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின் வேண்டுமா, பழனிசாமி வேண்டுமா என்ற அடிப்படையில்தான் மக்கள் ஓட்டுப் போடுவார்கள். இதுதான் அரசியல்” என்றார்.
விஜய் கூட்டணி
இதையடுத்து விஜய் உடன் காங்கிரஸ் கூட்டணி சேருமா என்ற கேள்விக்கு பதிலளித்த மணி சங்கர் ஐயர், “திமுக தான் நம் கூட இருக்கிறது; விஜய் உடன் காங்கிரஸ் சேர்ந்தால் இருவரும் பாதாளத்திற்கு செல்ல வேண்டியதுதான்” என அதிரடியாக பதிலளித்தார். தொடர்ந்து, “விஜய் உடன் போக வேண்டும் என நினைப்பது பைத்தியக்காரத்தனம்; முதலில் விஜய் ஜெயிச்சு காட்டட்டும்” எனவும் மணிசங்கர் ஐயர் காட்டமான பதிலை அளித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த தேமுதிக.. தமிழக அரசியலில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்