மதுரை, ஜன.21, 2026: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பெண்களுக்கு மனைவி என்ற அந்தஸ்து வழங்க வேண்டும் என தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
வழக்கு என்ன?
திருச்சி மாவட்டம் மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், தன்னை திருமணம் செய்வேன் என்று வாக்குறுதி அளித்து ஆண் ஒருவர் ஏமாற்றிவிட்டார் எனக் கூறிஇருந்தார்.
இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட நபர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பாரதிய ந்யாய சன்ஹிதா (BNS) பிரிவு 69-ஐ நீதிமன்றம் குறிப்பிட்டு நிராகரித்தது.
மேலும், நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து, பெண்களுக்கு ‘மனைவி’ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்தத் தீர்ப்பை நீதிபதி எஸ். ஸ்ரீமதி தலைமையிலான மதுரை அமர்வு வழங்கியுள்ளது.
தீர்ப்பின் தாக்கம்
- பெண்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.
- சமூக அவமதிப்பு குறையும், பெண்கள் தங்கள் உரிமைகளை வலியுறுத்த முடியும்.
- திருமண வாக்குறுதி அளித்து விலகும் ஆண்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எளிதாகும்.
- பெண்களை ஆண்கள் தவறாக வழிநடத்துவதும் குறையும்.
மேலும், இந்தியாவில் லைவ்-இன் உறவுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்ப்பு பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
தொடர்ந்து, இது திருமணமில்லாத உறவுகளுக்கும் சட்ட அந்தஸ்து வழங்கும் வழியைத் திறக்கிறது. சமூக மற்றும் சட்ட ரீதியான சமநிலை ஏற்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தி.மு.க கூட்டணி முறிவு இல்லை.. ராகுல் குறிப்பிட்ட 2 விஷயம்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்