Citizenship for Sri Lankan Tamils: “இலங்கை தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்” என தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
Citizenship for Sri Lankan Tamils: “இலங்கை தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்” என தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

Published on: February 24, 2026 at 7:36 pm
சென்னை, பிப்.24, 2026: “இலங்கை தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்” என தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்; நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம் நீண்டகாலமாக இந்திய மண்ணில் வசித்து வரும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமையை இந்திய அரசு விரைந்து வழங்கும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “அதுவரை நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்” எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 24 மணி நேர சிகிச்சை.. தொடர் கண்காணிப்பு.. எப்படி இருக்கிறார் நல்லக்கண்ணு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com