LTTE Prabhakaran Deepfake Video | தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வயதான தோற்றத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
LTTE Prabhakaran Deepfake Video | தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வயதான தோற்றத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
Published on: September 3, 2024 at 11:40 am
LTTE Prabhakaran Deepfake Video | தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படம் என்று ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகிவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படம் ஒன்று ஒரு போட்டோவை அவரது ஆதரவாளர்கள் இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர்.
இந்தப் புகைப்படம், டீப்ஃபேக் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ மற்றும் புகைப்படம் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை சிங்கள ராணுவத்துக்கும் இடையேயான போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.
அண்மையில் பிரபாகரன் மகள் என்று கூறப்பட்ட துவாரகா என்ற பெண்ணின் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவும் போலியானது என சில தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். எனினும், அவர் வெளிநாட்டில் இருந்து பேசியுள்ளார் என்றும் கூறப்பட்டது.
இந்த வீடியோ வெளியான நேரத்தில் தமிழ்நாட்டின் சில தலைவர்கள் கூட பிரபாகரன் உயிருடன் இல்லை என்பன போன்ற கருத்துக்களை மறைமுகமாக வெளியிட்டனர். இந்த நிலையில் தற்போது வயதான தோற்றத்தில் பிரபாகரன் இருப்பது போன்ற ஓர் வீடியோ வெளியாகி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த அனுமதி: தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com