Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விஜய் மார்ச் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார்.
Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விஜய் மார்ச் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார்.

Published on: March 14, 2026 at 11:41 pm
Updated on: March 15, 2026 at 12:13 am
புதுடெல்லி மார்ச் 14, 2026; நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜய், டெல்லி சிபிஐ தலைமையகத்தில் மார்ச் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆஜராகிறார்; கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து, தனி விமானத்தில் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜய் டெல்லி புறப்பட்டார்.
அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் பலர் டெல்லி சென்றுள்ளார்கள்.
சிபிஐ விசாரணை
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று, கரூரில் விஜய்யின் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்காக 2026 ஜனவரி மாதம் விஜய் இருமுறை சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜரானார்; அவரிடம் பல மணி நேரங்கள் விசாரணை நடத்தப்பட்டது; இந்த நிலையில் அவர் மீண்டும் விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நாளை ஆஜராகிறார்.
பரபரக்கும் தேர்தல் களம்
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது; இந்த தேர்தல் அறிவிப்பு மார்ச் 16ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், அதிமுக உடன் கூட்டணி சேருவார் என்ற யூகங்கள் பரவி வருகின்றன.
இதற்கிடையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர், மற்றும் அனுதாபிகள் விஜய் அதிமுக உடன் கூட்டணி வைக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த காலங்களில் ஆதவ் அர்ஜுனா, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என பேசிய காணொளியும் தற்போது பரவி வருகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
முன்னதாக காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ளும் என பலர் கூறி வந்தார்கள்; எனினும் கடைசி நேரத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளாட்சியிலும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது; இதற்கிடையில் விஜய் அதிமுக கூட்டணிக்கு சென்றால், கூட்டணி மிகப்பெரிய வலிமையை பெறும் என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முன்னணி வகிக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றார்கள்.
இதையும் படிங்க; சட்டமன்றத்தில் குரல் கொடுக்க 10 எம்.எல்.ஏ.,க்கள் தேவை.. மார்க்சிஸ்ட் கே. பாலகிருஷ்ணன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com