“கூவம் விவகாரத்தில் வெள்ளை அறிக்கை கோரி நான் மேயருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன்; உரிய பதில் வரவில்லை” என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
October 19, 2025
“கூவம் விவகாரத்தில் வெள்ளை அறிக்கை கோரி நான் மேயருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன்; உரிய பதில் வரவில்லை” என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

Published on: September 6, 2024 at 11:05 pm
Karti Chidambaram | காங்கிரஸ் எம்பி கார்த்தி பேட் சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழக பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் கலாச்சாரம் மிகவும் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இந்தி திணிப்பு
தொடர்ந்து மத்திய அரசின் முன்மொழிக் கொள்கை பற்றி பேசிய கார்த்தி ப சிதம்பரம், ” எந்த மொழியை விருப்பம்போல் படிக்கலாம் எனக் கூறினாலும் இதிலும் இந்தி திணிப்பு உள்ளது” என்றார்.
கூவம் ஆறு விவகாரம்
அடுத்து,கூவம் ஆறு விவகாரம் குறித்து பேசிய கார்த்தி ப சிதம்பரம், ” கூவம் விவகாரத்தில் வெள்ளை அறிக்கை கோரி நான் மேயருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மாநகராட்சி கூட்டத்தில் கோவம் நதிக்கு ரூபாய் 829 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அந்தத் தொகை எதற்கெல்லாம் செலவிடப்பட்டது எனக் கோரி உள்ளேன்” என்றார்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய்யை பார்த்து திமுக அஞ்சுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கார்த்திகை சிதம்பரம், ” நடிகர் விஜய் பார்த்து திமுக அஞ்சுகிறது எனக் கூறுவது தவறு. காவல்துறை கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்கும் பட்சத்தில் அவரது மாநாட்டுக்கு அனுமதி கட்டாயம் அளிப்பார்கள். மாநாடு நடக்கும். அதன் பின்னர் ஒன்றும் நடக்காது. ஒருவேளை மாநாட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் புதுக்கோட்டையில் மாநாடை வைத்துக் கொள்ளலாம்” என்றார்.
வினேஷ் போகத்
ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து பேசிய கார்த்திக் சிதம்பரம், ” பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி காங்கிரஸ்தான்” என்றார்.
இதையும் படிங்க : காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், புனியா: ஹரியானா தேர்தலில் போட்டி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com