K Veeramani : தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வரவெற்பு தெரிவித்துள்ளார்.
K Veeramani : தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வரவெற்பு தெரிவித்துள்ளார்.
Published on: August 26, 2025 at 10:51 pm
Updated on: August 26, 2025 at 10:52 pm
சென்னை, ஆக.26 2025: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பல இடங்களிலும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயுக்களைப் பூமிக்கடியிலிருந்து எடுக்கும் திட்டங்களுக்கு ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் அனுமதி கோரிய வண்ணம் இருக்கின்றன. ஏற்கெனவே, கதிராமங்கலம், புதுக்கோட்டை நெடு வாசல் உள்ளிட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இதற்கு பெரும் மக்கள் எதிர்ப்பு எழுந்தது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடமான கொள்கை முடிவாகும்.” எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “தமிழ்நாட்டின் இயற்கை அமைவுச் சூழல் பாதிக்கப்படாமல் இருக்க வும், வேளாண்மை நிலங்கள் பாது காக்கப்படவும் எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையை வரவேற்கிறோம் – பாராட்டுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com