‘தமிழ்நாட்டின் புதிய கவர்னரும் ஆர்.எஸ்.எஸ்-காரர் தான்’.. கி. வீரமணி!

K. Veeramani: தமிழ்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னரும் ஆர் எஸ் எஸ் காரர் தான் என தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி

Published on: March 7, 2026 at 3:32 pm

Updated on: March 7, 2026 at 3:33 pm

சென்னை மார்ச் 7 2026; தமிழ்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னரும் ஆர்.எஸ்.எஸ் காரர் தான் என தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி. இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தேர்தல் வருவதால், அவர் மாற்றப்படுவதற்கு அதுவே ‘ஒரு காரணமாக’ இருக்கக்கூடும் என்ற கருத்து உள்ளது; அல்லது மேற்கு வங்கத்தில் எப்பாடு பட்டாவது பா.ஜ.க. ஆட்சியை அமைக்க, இவர்தான் பல வகைகளில் உதவிகரமாக இருப்பார் என்று கருதியும்கூட அவரது மாற்றல் ஏற்பட்டிருக்கலாம்!

மோடி, அமித்ஷா போன்றவர்களுக்கு – ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு ஏதோ ஓர் உள்ளார்ந்த திட்டமும் அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்தான் அவருக்குப் பதிலாக புதிதாக ஓர் ஆளுநரை நியமிக்காமல், கேரள மாநிலத்தின் ஆளுநராக உள்ள (அவரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாட்டையும் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது! எது, எப்படியானாலும், தமிழ்நாட்டைப் பிடித்து வந்த ‘அரசியல் பீடை’ அகன்றது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க; கோவை மாணவி பாலியல் வன்கொடுமை.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com