D K Ki Veeramani: மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள தாயுமானவர் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
D K Ki Veeramani: மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள தாயுமானவர் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
Published on: August 13, 2025 at 10:10 am
சென்னை, ஆக.12 2025: வரலாறு படைக்கும் முதலமைச்சரின் மனிதநேயம் என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் குடும்பங்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் உள்ள இல்லங்களுக்கும் அரசின் நுகர்பொருள் வழங்கு துறைமூலம், வாரம் இரண்டு நாள்கள் நேரில் சென்று வழங்கும் அந்தச் சிறப்பு, வரலாறு படைக்கும் அரியதொரு புதுமை நிறைந்த திட்டம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “22 லட்சம் பேர் பயனுறும் இந்தத் திட்டத்திற்குத் ‘‘தாயுமானவர் திட்டம்’’ என்ற பெயர் மிகவும் பொருத்தமானதாகும்” எனக் குறிப்பிட்டுள்ள கி. வீரமணி, “முதுமையாலும், உடலின் வலிமை இழந்தாலும் உள்ள நலத்தோடு வாழும் முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகள் குடும்பத்திற்கும் கிடைத்துள்ள இந்தத் திட்டம் சமதர்மத்தின் முதல் நுழைவு வாயில் என்றால், மிகையல்ல” எனவும் பாராட்டியுள்ளார்.
மேலும், “ நீண்ட நேரம் வரிசையில் நின்று, பொருள்களைப் பெற அல்லற்பட்டு அழுதிடும் கண்ணீரைத் துடைத்தெறிந்து, மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் மகத்தான மனிதநேய சாதனைத் திட்டமே இது.
முதலமைச்சரின் மனிதநேயம் என்றென்றும் நன்றிக்குரியது; என்றும் வரலாறு படைக்கும் – வரவேற்றுப் பாராட்டுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com