Assembly Election 2026: ” தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.
Assembly Election 2026: ” தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.

Published on: March 15, 2026 at 7:22 pm
சென்னை மார்ச் 15, 2026;தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இது தொடர்பாக தனது அதிருப்தியை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் ஜோதிமணி எம்பி, “பொதுவாக தமிழ்நாடு ,கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் தான் தேர்தல் நடப்பது வழக்கம். இந்தமுறை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்வது ஒன்றும் கஷ்டமில்லை” என தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் மீது விமர்சனம்
பொதுவாக தமிழ்நாடு ,கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் தான் தேர்தல் நடப்பது வழக்கம். இந்தமுறை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்வது ஒன்றும் கஷ்டமில்லை. பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பது தேர்தல்…
— Jothimani (@jothims) March 15, 2026
தொடர்ந்து ஜோதிமணி எம்பி, “பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பது தேர்தல் தேதியிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. எல்லாவற்றையும் எதிர்கொள்கிற அறிவும் ,அரசியல் புரிதலும் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. இந்தியா கூட்டணிக்கும் உண்டு” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க; காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படிச் சாத்தியம்? டிடிவி தினகரன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com