Jawahirullah: தேசிய தடய அறிவியல் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
Jawahirullah: தேசிய தடய அறிவியல் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
Published on: June 6, 2025 at 1:27 pm
சென்னை, ஜூன் 6 2025: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வியாழக்கிழமை (ஜூன் 5 2025) விடுத்துள்ள அறிக்கையில், “தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (National Forensic Science University) இந்தியா முழுவதும் உள்ள தனது அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஒருங்கிணைந்த இளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை வருகிற சனிக்கிழமை (தியாகத்திருநாள் -பக்ரீத் ) அன்று நடத்துவதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிகளிலிருந்து மட்டும் 1800க்கும்மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். அதில் பல முஸ்லிம்மாணவ, மாணவிகளும் தமிழ்நாடு அரசின் நிதி உதவியின் கீழ் விண்ணப்பித்துள்ளனர்.
தியாகத் திருநாள் அன்று இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது முறையல்ல. இந்த நுழைவுத் தேர்வை நடத்தும் National Forensic Science University, Gandhi Nagar, Gujarat (Nodel Authority) க்கு என்னுடைய வன்மையான கண்டனம். தேர்வு தேதியை உடனடியாக மாற்றக் கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது? அன்புமணி ராமதாஸ் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com