Radhapuram Assembly: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் விருப்ப மனு அளித்துள்ளார்.
Radhapuram Assembly: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் விருப்ப மனு அளித்துள்ளார்.

Published on: December 15, 2025 at 3:27 pm
திருநெல்வேலி, டிச.15, 2025: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் முன்னாள் எம்.பி சௌந்தரராஜன். முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களாட்சி மலர்ந்திட, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நோக்கில் இந்த வேட்புமனுவை அளித்துள்ளார்.
இந்த விருப்ப மனு, கழக துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி. முனிசாமி, எம்.எல்.ஏ., நத்தம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ., கழகப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ., கழகத் தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏ. மற்றும் கழக அமைப்புச் செயலாளர் தங்கமணி, எம்.எல்.ஏ ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வு, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திய இனிய தருணமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி செல்லுமா? செல்வப் பெருந்தகை பதில் இதுதான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com