Assembly Election 2026: பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ்- சசிகலா கட்சிகளுக்கு இடையே புதிய கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
Assembly Election 2026: பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ்- சசிகலா கட்சிகளுக்கு இடையே புதிய கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

Published on: March 20, 2026 at 8:45 pm
சென்னை மார்ச் 20, 2026; தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது; இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ராமதாஸ்- சசிகலா கூட்டணி
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் ராமதாஸ், முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் புதிய கட்சியான அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெற்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமூகமான முடிவை எட்டியுள்ளன; இதனால் தமிழ்நாட்டில் ஐந்து முறை போட்டி ஏற்பட்டுள்ளது.
வெற்றிக் கூட்டணி
இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாஸ், ” எங்கள் கூட்டணியை பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுகிறோம்; இந்தக் கூட்டணியை வெற்றி கூட்டணியாக அமைத்துள்ளோம். எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள் எங்கள் இருவரையும் சந்தித்து கூட்டணியில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்” என்றார்.
ஐந்து முனைப் போட்டி
தமிழ்நாட்டில் இந்த புதிய கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தைப் பொறுத்தவரை ஆட்சியை தக்க வைக்க திமுகவும்; இழந்த ஆட்சியை மீட்க அதிமுகவும் தீவிரம் காட்டுகின்றன. இதற்கிடையில், வழக்கம் போல் நாம் தமிழர் தனித்து களம் காண்கிறது; நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகமும் தனித்து தேர்தலை சந்திக்கிறது. தேசியக் கட்சியான காங்கிரசை பொருத்தவரை திமுக கூட்டணியிலும், பாஜக அதிமுக கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; பாலியல் புகார்.. இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com