Edappadi Palaniswami: கரூர் பேரணையின் போது உரிய பாதுகாப்புகள் கொடுத்திருந்தால் உயிர்கள் போயிருக்குமா என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
Edappadi Palaniswami: கரூர் பேரணையின் போது உரிய பாதுகாப்புகள் கொடுத்திருந்தால் உயிர்கள் போயிருக்குமா என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
Published on: October 3, 2025 at 3:08 pm
சென்னை அக்டோபர் 3 2025: கரூர் துயரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். அதில் உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால் இது போன்ற உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்குமா என அவர் வினவி உள்ளார். மேலும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கட்டு உள்ளது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி, ” திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது இதற்கெல்லாம் காரணம். கரூர் கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளித்திருந்தால் இத்தனை உயிர்கள் போயிருக்காது. ஏன் இப்படி ஓரவஞ்சனை செய்கிறார்கள். எல்லோருக்கும் சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் இடம் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதா? ஆளுநருக்கு வைகோ கேள்வி
கரூர் கூட்ட நெரிசல் மரணம்
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் பேரணி கரூரில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் பேரணியின் போது எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பலியாகின. இந்த கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. கூட்டத்திற்கு பத்தாயிரம் பேர் வருவார்கள் என கூறப்பட்ட நிலையில் 500க்கும் குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இந்த கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின் வீடு, பா.ஜ.க அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல். சென்னையில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com