தமிழக அரசு நிர்வாகம் பற்றி பேசத் தயாரா? மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

Palaniswami Challenges Stalin: மு.க. ஸ்டாலின் நிர்வாகம் பற்றி பேசத் தயாரா? என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: April 13, 2026 at 10:02 pm

Updated on: April 13, 2026 at 10:46 pm

திண்டுக்கல், ஏப்.13, 2026: மு.க. ஸ்டாலின் நிர்வாகம் பற்றிப் பேசத் தயாரா? என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல்லில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ஸ்டாலினுக்கு மறதி அதிகம்; அதனால்தான் இதனை டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான தேர்தல் என்கிறார்” என்றார்.

மு.க. ஸ்டாலினுக்கு சவால்

மேலும், “மு.க ஸ்டாலினுக்கு தெம்பு இருந்தால் அவர் நிர்வாகம் குறித்து பேசட்டும்; அதற்கு நானும் பதிலளிப்பேன்” என்றார். முன்னதாக, திண்டுக்கல் மாவட்டத்தில் பல திட்டங்கள் வருவதற்கு திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் காரணமாக இருந்தார்கள்” என்றார்.

சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் ஏப்.23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மாநிலத்தைப் பொறுத்தவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸூம் அங்கம் வகிக்கின்றன.

இதையும் படிங்க: வேங்கைவயல், மது விலக்கு.. வி.சி.க. நிலைபாடு என்ன? தொல். திருமாவளவன் பதில்!

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது வழக்கு! Dalit Student Death in Kerala

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com