இந்தியா முழுக்க சுயமரியாதை திருமணங்கள்.. தஞ்சை திராவிட கழக மாநாட்டில் தீர்மானம்!

K. Veeramani: இந்தியா முழுக்க சுயமரியாதை திருமணங்களை கொண்டு செல்ல வேண்டும் என தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Published on: February 21, 2026 at 4:53 pm

தஞ்சை பிப்ரவரி 21, 2026: தஞ்சையில் இன்று (21.2.2026) பழைய பேருந்து நிலையம் அருகில், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில், திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை மாநில மாநாடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இம்மாநாட்டிற்குத் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மற்றும் இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் திரண்டனர். மாலையில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக மாநில மாநாடும், பேரணியும் நடைபெற்றது.

இந்த மாநாட்டில்,சுயமரியாதைத் திருமண சட்டத்தை இந்திய அளவில் கொண்டு வருக என்றும், ‘திராவிட மாடல்’ அரசின் பெண்களுக்கான பொருளாதார உதவிகள், இலவச திட்டங்கள் அல்ல – பெண்கள் வளர்ச்சிக்கான உரிமைத் திட்டங்களாகும் என்றும், அர்ச்சகராகும் உரிமை பெண்களுக்கும் தேவை என்றும், நூற்றாண்டு காணும் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்ற தந்தை பெரியாரின் நூலினை ரூ.20 நன்கொடை யில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டிருப்பதை வெகு மக்களிடம் கொண்டு செல்வோம் என்றும், சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு சட்டத் திருத்தத்தை உடனே செயல்படுதத வேண்டும் என்றும் தஞ்சை திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க:  ராஜினாமா அல்லது பதவி நீக்கம்.. கே.என். நேருவுக்கு கெடு விதித்த த.வெ.க விஜய்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com