இவர்களுடன்தான் தேர்தல் கூட்டணி.. அதிரடியாக அறிவித்த மருத்துவர் ராமதாஸ்!

Assembly Election 2026: சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: February 26, 2026 at 12:20 pm

சென்னை, பிப்ரவரி 26 2026: பாமக நிறுவனரான டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நிலவி வரும் அதிகாரப் போட்டி காரணமாக கட்சி இரண்டாக பிரிந்துள்ளது.
அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டது. ராமதாஸ் தரப்பினர் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டினாலும் அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் திமுக கூட்டணியில் இணைவது கேள்விக்குறியாகவே உள்ளது.

இத்தகைய சூழலில் தனது அரசியல் பலத்தை நிரூபிக்கவும் அடுத்த கட்ட நகர்வை முடிவு செய்யவும் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் இன்று கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூட்டணி தொடர்பான கேள்விக்கு திராவிட கட்சிகளுடன்தான் கூட்டணி இருக்கும் என்றும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க த.வெ.க ரெடி.. கிரிஷ் சோடங்கர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com