Sivaji Krishnamurthy: திமுகவின் முக்கிய பேச்சாளராக வலம் வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Sivaji Krishnamurthy: திமுகவின் முக்கிய பேச்சாளராக வலம் வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Published on: February 14, 2026 at 9:23 pm
சென்னை பிப்ரவரி 14, 2026; திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி பேச்சாளராக வலம் ளம் வரும் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு, வழக்கு ஒன்றில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேடைகளில் தனது தீப்பொறி பேச்சுகளால் கவனம் ஈர்த்தவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. பலராலும் பேச தயங்கும் ஆபாசமான வார்த்தைகளை கூட இவர் எளிதில் பேசி விடுவார். எனினும் இவரின் பேச்சு ஜனரஞ்சகமாக இருப்பதால் எதிர்ப்புடன் ஆதரவும் கிடைக்கும். குறிப்பாக திமுகவினர் மத்தியில் இவர் பிரபலம்.
இந்த நிலையில் வழக்கு ஒன்றில் சென்னை நீதிமன்றம் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. கவர்னர் ஆர் என் ரவி மற்றும் நடிகை குஷ்பு குறித்து அவதூறு கருத்து பேசியதாக பதியப்பட்ட வழக்கில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க; த.வெ.க சேலம் பேரணியில் சோகம்.. தொண்டர் உயிரிழப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com