Waqf Amendment Act in SC: வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்ச நீிதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Waqf Amendment Act in SC: வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்ச நீிதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Published on: May 4, 2025 at 12:52 pm
Updated on: May 4, 2025 at 1:14 pm
சென்னை, மே 4 2025: வக்ஃப் சட்டத் திருத்தம் தொடர்பாக தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 ஐ கொண்டுவந்தது. இந்தத் திருத்தச் சட்டம் ஏப்ரல் 5 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த நிலையில் மசோதா சட்டமாக்கப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக அசாதுதீன் ஓவைசி கட்சி, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க. மற்றும் த.வெ.க விஜய் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
இதையும் படிங்க : வக்ஃப் சட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதில்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு!
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. முன்னதாக, 2025 ஏப்ரல் 17ஆம் தேதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பயனர் மூலம் வக்ஃப்’ அல்லது ‘பத்திரம் மூலம் வக்ஃப்’ சொத்துக்கள் அடுத்த விசாரணை வரை அறிவிக்கப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்தது.
இந்த நிலையில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த பதில் மனுவில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தி.மு.க. சார்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “வக்ஃப் வழக்கில் ஒன்றிய அரசின் பதில் மனுவில் கூறப்பட்ட வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை. அந்த வாதங்களை நிராகரித்து புதிய சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தி.மு.க.வின் சாதனை இதுதான்.. உதயநிதியை கைகாட்டிய எடப்பாடி பழனிசாமி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com