MK Stalin: திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெறுகிறது.
MK Stalin: திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெறுகிறது.

Published on: November 9, 2025 at 2:59 pm
சென்னை நவம்பர் 9 2025; திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில், தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தம் குறித்து விவாதிக்கப்படலாம் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இது மட்டுமின்றி 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது; மு.க ஸ்டாலின் முதலமைச்சராக உள்ளார்.
இவரின் ஆட்சிக் காலத்தில், திமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் தேர்தல் வெற்றிக்காக என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்தியா கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவில் பாரதிய ஜனதா பிரதான கூட்டணி கட்சியாக உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.
நாம் தமிழர் தனித்துப் போட்டியென அறிவித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் விஜய் தலைமையிலான கூட்டணியை மட்டுமே ஏற்பதாக அறிவித்துள்ளது. இதனால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: தமிழர் பண்பாடு சீரழிப்பு.. தமிழ்நாட்டில் Big Boss நிகழ்ச்சிக்கு தடை.. வேல்முருகன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com