Assembly election 2026: விஜய் மத அரசியல் செய்கிறார் என தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், வேட்பாளருமான கருணாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Assembly election 2026: விஜய் மத அரசியல் செய்கிறார் என தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், வேட்பாளருமான கருணாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: April 3, 2026 at 1:22 pm
சென்னை, ஏப்.3, 2026: விஜய் மத அரசியல் செய்கிறார் என தி.மு.க. கூட்டணி வேட்பாளரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய கருணாஸ், “பாரதிய ஜனதா கட்சியை விட மோசமான மத அரசியலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செய்கிறார்” என்றார். மேலும், “இத்தனை நாட்கள் மத அடையாளத்தை காட்டாத விஜய், தேர்தல் நேரத்தில் தனது மத அடையாளத்தை காட்டுவது ஏன் எனவும் கருணாஸ் கேள்வியெழுப்பினார்.
கூட்டத்தை வைத்து..
தொடர்ந்து, விஜய்க்கும் கூடும் கூட்டத்தை பற்றி விமர்சனம் செய்த கருணாஸ், “அரசியலில் கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியாது. கரகாட்டத்துக்கு கூட கூட்டம் வரும், இதில் வாக்குகள்தான் முக்கியம்” என்றார்.
ஏப்.23 வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: 100 சதவீத வெற்றி.. திருச்சியில் மு.க ஸ்டாலின் பரப்புரை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com